search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி
    X
    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி நடைபெற்றது.தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் ஆருத்ரா உற்சவ நிகழ்ச்சி கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×