
சனிபகவான் தனுசுராசியில் இருந்து மகரராசிக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை, திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. காலை 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு பிரவேசிக்கும் நேரம் ஹோமம் நிறைவு பெறும்.
பின்னர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். https://www.youtu-be.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTembleOfficial என்ற யூடியூப் சேனல் மூலம் 27-ந்தேதி காலை 4 மணி முதல் ஒளிபரப்பாகும் வழிபாடுகளை நேரலையில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
மேற்கண்ட தகவலை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.