
இதையொட்டி தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை சுப்ரபாதம், கும்பஜெபம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், தயிர், பால், தேன், இளநீர். பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம், மாலை 6 மணிக்கு சாயரக்சையை தொடர்ந்து ஸ்ரீமத் பாகவத மூலபாராயணம், இரவு 7 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், ஆத்ம நிவேதனம், 8 மணிக்கு சுவாமி புறப்பாடு, 9 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
மேலும் இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி முதல் இரவு பத்து நாள் உற்சவம் தொடங்கியது. மேலும் வருகிற 24-ந் தேதி மோகன அலங்காரம், 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 4-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம், 13-ந் தேதி அனுமன் ஜெயந்தி, 14-ந் தேதி தைப்பொங்கல் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.