search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

    பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத பிறப்பைெயாட்டி நேற்று திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மார்கழி மாத மாதப்பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜையும் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோல் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியிலும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சாமிக்கு, 16 வகை அபிஷேகமும், கலச அபிஷேகமும், வெள்ளி கவச அலங்காரமும் செய்யப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள்கள் செய்திருந்தனர்.

    மார்கழி மாத சிறப்பு பூஜையை ெயாட்டி அதிகாலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். நடைதிறப்பிற்கு முன்பே கோவில் வாசலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர்.

    தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிகம் இருந்தது. இதேபோல் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நத்தத்தில் மாரியம்மன், கைலாசநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×