search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி
    X
    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி

    சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான இந்த கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி முக்குள தீர்த்தவாரி நடந்தது.
    சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான இந்த கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி முக்குள தீர்த்தவாரி நடந்தது.

    இந்தக் கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாக விளங்குகிறது. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம், இந்த கோவிலில் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மேலும் மூன்று குளங்கள் உள்ள ஒரே கோவிலாக இந்த கோவில் தனி சிறப்புடன் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு முக்குளங்களில்

    தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க குளக்கரைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு பால் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம் ஆகியோர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×