search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் கோவில் சுவாதி நட்சத்திர மகா யாகம்
    X
    வரதராஜ பெருமாள் கோவில் சுவாதி நட்சத்திர மகா யாகம்

    இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவில் சுவாதி நட்சத்திர மகா யாகம்

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மர், பெருந்தேவி தாயார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய மூலவருக்கு திருமஞ்சனம் செய்து பின்னர் உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து யாக மண்டபத்தில் வைத்தனர்.

    ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் மற்றும் 22 பக்தர்கள் கலந்துகொண்டு சுவாதி நட்சத்திரம் வரைந்து 27 நட்சத்திரங்களை வைத்தனர். 108 கலச புனிதநீரை கொண்டு மகா யாகம் தொடங்கியது. இதில் திருமண தடை நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும், உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று நோய் அழியவும் யாகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறை பக்தர்களுக்கு வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    மேலும் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.
    Next Story
    ×