search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி
    X
    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கடந்த 15-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

    பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அலுவலரும், உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×