search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கம்
    X
    சிவலிங்கம்

    கொம்பு வடிவ சிவலிங்கம்

    சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம், காமதேனு பசுவின் கொம்பு வடிவில் அமைந்துள்ளது.
    சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம், காமதேனு பசுவின் கொம்பு வடிவில் அமைந்துள்ளது. சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி அபூர்வமானதாக கூறப்படுகிறது.

    கொடிமரத்தில் தட்சிணாமூர்த்திகும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில்.

    பொதுவாக சிவன் ஆலயங்களில் கருவறை சுற்றில் தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்பாலிப்பது வழக்கமான அமைப்பாகும்.

    ஆனால் இந்த ஆலயத்தின் கொடிமரத்தின் தென் திசையை நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது.
    Next Story
    ×