search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சக்கரபாணி
    X
    சக்கரபாணி

    அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தரும் பெருமாள்

    சக்கரபாணி திருக்கோவிலில் உள்ள மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், ‘சக்கரபாணி’ என்று பெயர் பெற்றார்.
    கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக திகழ்வது, சக்கரபாணி திருக்கோவில் ஆகும். காவிரி ஆற்றின் தென்கரையில், பெரிய கடைத்தெருவின் வடக்கு மூலையில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இத்தல மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், ‘சக்கரபாணி’ என்று பெயர் பெற்றார். எட்டு கரங்களைக் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் இந்த பெருமாளிடம், சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை போன்றவை காணப்படுகின்றன. சக்கரபாணி, ருத்ராட்சம் வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால், அவருக்கு சிவபெருமானைப் போல வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.

    இத்தல தாயாரான விஜயவல்லியும் நின்ற கோலத்திலேயே அருள்புரிகிறாள். சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இது ‘பாஸ்கரத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சாரங்கபாணி கோவிலில் இருப்பதைப் போல, இங்கும் தட்சிணாயன வாசல் மற்றும் உத்தராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கின்றன.
    Next Story
    ×