search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரியில் வழிபாடு செய்த பக்தர்கள்
    X
    சதுரகிரியில் வழிபாடு செய்த பக்தர்கள்

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

    மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    பேரையூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

    மகாளய அமாவாசைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    மகாளய அமாவாசையன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அன்று ஒரு நாள் மட்டும் 10,800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி ஆகிய முன்னேற்பாடுகள் வசதி அனைத்தும் செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு வசதி சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்படும் என கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் செயல் அலுவலர் விஸ்வநாத் கூறினர்.
    Next Story
    ×