search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பவித்ரோற்சவ நிகழ்ச்சி
    X
    பவித்ரோற்சவ நிகழ்ச்சி

    மேட்டுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி

    வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 6-ந் தேதி தோமாலையுடன் தொடங்கியது. பின்னர் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி மற்றும் விஸ்வக்ஸேனருடன் ஆச்சாரியார்களோடு யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தி நடந்தது.

    3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 4 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×