search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்ற பக்தர், கோவில் முன்புறம் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்களை காணலாம்.
    X
    குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்ற பக்தர், கோவில் முன்புறம் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்களை காணலாம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

    ஊரடங்கை தளர்த்திய காரணத்தால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையிலும் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், பஸ், இருசக்கர வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வருவார்கள்.

    கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக கோவில் மூடப்பட்டதால் அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் சமயபுரம் கடைவீதி மற்றும் தேரடி முன்பு தீபம் ஏற்றி வழிபட்டு சென்றார்கள். இந்நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த 1-ந்தேதி முதல் அரசு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஊரடங்கு தளர்த்திய காரணத்தாலும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்திருந்தனர். அவர்கள் கோவில் முன்புறம் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கினர்.

    மேலும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சில பக்தர்கள் தங்கள் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். ஒரு சிலர் கோவில் வெளி பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்த காரணத்தால் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்காணிக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×