search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது
    X
    ராகு கேது

    இன்று ராகு-கேது பெயர்ச்சி: கோவில்களில் வழிபாடு

    இன்று நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் ராகு -கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    ராகு-கேது பெயர்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 2.10 மணிக்கு மிருகசீர்ஷம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசியில் ராகுவும், கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள்.

    இதையொட்டி புதுவையில் நவக்கிரகங்கள் உள்ள காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில், கற்பக விநாயகர் கோவில், இடையார்பாளையம் ஞானமேடு சொர்ணஹர்சன பைரவர் கோவில், வில்லியனூர் திருகாமீஸ்வரர், பாகூர் மூலநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ராகு -கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து கோவில்களிலும் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×