
இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முத்தங்கி சாற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றவாறு சாமியை வழிபட்டு செல்வதை பார்க்க முடிந்தது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிமாத கிருத்திகையையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பாலசுப்ரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதேபோல பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகர் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.