search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சயன கோலத்தில் ஈசன்
    X
    சயன கோலத்தில் ஈசன்

    சயன கோலத்தில் ஈசன் இருக்கும் தலம்

    பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் சுருட்டப்பள்ளியில் மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது.
    சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. இந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி.

    திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன்.

    இப்படி அம்பாளின் மடி மீது தலை வைத்தபடி சயன கோலத்தில் ஈசன் இருக்கும் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் இங்கு மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது. இந்த மூலவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×