search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் படையல் செய்வது எப்படி?
    X
    வீட்டில் படையல் செய்வது எப்படி?

    வீட்டில் படையல் செய்வது எப்படி?

    சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று, பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    * மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.

    * சிறு தட்டில் மறைந்தவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.

    * 2 குத்து விளக்குகள் வைத்து ஒரு முகம் ஏற்றவும். மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் படையல் வைக்க வேண்டும்.

    * தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழையிலை படையல் போடவும்.

    * ஒட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்வது நல்லது.

    * கோதுமை தவிடு 2 கிலோ, அகத்திகீரை, வெல்லம்  கிலோ, வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.
    Next Story
    ×