
இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் இருந்து அருள்கிறார். இங்கு தட்சிணாமூர்த்தி விசேஷமானவர் என்பதால், இதனை ‘தட்சிணாமூர்த்தி தலம்’ என்பார்கள். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால், இந்த திருத்தலத்திற்கு ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது.