search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமர்
    X
    ராமர்

    ராம அவதாரத்தை பூர்த்தி செய்த எமதர்மன்

    ராமனது அவதார கடமைகளை முடித்து, வைகுண்டம் செல்லும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு எமதர்மனுக்கு வந்து சேர்ந்தது. அவர் அந்த பொறுப்பை எப்படி பூர்த்தி செய்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ராம அவதாரத்தின் முடிவில், அயோத்தியின் ஆட்சியில் லவ-குசர்களுக்கு முடிசூட்டப்பட்டது. ராமனது அவதார கடமைகளை முடித்து, வைகுண்டம் செல்லும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு எமதர்மனுக்கு வந்து சேர்ந்தது. அவர் பிரம்மதேவனை வேண்டி, தக்க வழிமுறையை அறிந்தார். அதன்படி எமதர்மன், அதிபலா மகரிஷியின் சீடனாக அவ தரித்து ராமனைச் சந்தித்தார்.

    ராமனுடன் தனியாக தேவ ரகசியங்கள் பற்றி பேச இருப்பதால், தங்கள் அறைக்குள் யாரும் வரக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். ராமனின் ஆணைப்படி, அறைக்கு வெளியே லட்சுமணன் காவல் இருந்தபோது, அங்கு வந்த துர்வாச முனிவர், ராமனைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் லட்சுமணனின் தடையை மீறி அறைக்குள் சென்றுவிட்டார்.

    கடமையிலிருந்து தவறியதாக கலங்கிய லட்சுமணன், சரயு நதிக்கரைக்கு சென்று “ராம், ராம்” என்று ஜபித்தபடியே ஆற்றில் மூழ்கி உயிர் விட்டார். தகவல் அறிந்த ராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, வெள்ளத்தில் மூழ்கி ராமாவதார நோக்கத்தை பூர்த்தி செய்கிறார். தனது கடமையை இந்த விதத்தில் எமதர்மன் செய்து முடிக்கிறார்.

    மகாபாரதத்தில் எமதர்மனின் அம்சமாக தோன்றியவர் விதுரர் ஆவார். அவரது நீதி வழிகாட்டும் சன்மார்க்க நெறிமுறைகள் ‘விதுர நீதி’ என்ற நூலாக அமைந்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், குந்திதேவிக்கு எமதர்மனின் அனுக்கிரகத்தில் பிறந்தவர். எந்த நிலையிலும் தர்மம் தவறாமல் அரசு புரிந்த அவர், எமதர்மனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×