search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
    X

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்

    கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது
    கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று(செவ்வாய்கிழமை) இரவு 10 மணிக்கு பகாசூரனுக்கு சோறுபோடுதல், நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு தெருக்கூத்து மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா, 20-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு புஷ்ப விமானத்தில் அம்மன், கிருஷ்ணன் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு அர்ச்சுனன் தவசு, மதியம் 12 மணிக்கு யாதவர்கள் பசுக்களை விரட்டுதல், 1 மணிக்கு அரவாண் குருஷேத்திர போருக்கு களபலிக்காக நகர்வலம் வருதல், மதியம் 3 மணிக்கு திரவுபதி அம்மன் வீரம்மாங்காளியாக உருவெடுத்து நகர்வலம் வருதல், மாலை 6 மணிக்கு தீ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 22-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் நகரவாசிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×