search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேர்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    தேர்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவ விழா: தேர் அலங்கார பணிகள் மும்முரம்

    திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 29-ந் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லாக்கில் வீதிஉலா, 12-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் தர்பாரண்யேஸ்வரர் உள்பட 5 தேர்கள் ஊர்வலம் செல்லும்.

    இந்த தேர்கள் அலங்கரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன ஹைட்ராலிக் பிரேக் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடையும், தேரோடும் வீதிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×