என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்14 Sep 2017 3:40 AM GMT (Updated: 14 Sep 2017 3:40 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான நம்பெருமாள் உறியடி உற்சவ புறப்பாடு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேந்தார்.
காலை 11 மணிமுதல் மதியம் 2 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுஜனசேவை நடைபெற்றது. பின்னர் மாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் உறியடி உற்சவ புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7.15 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளுகிறார். மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேருகிறார்.
மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.15 மணியளவில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் நடைபெறும் உறியடி உற்சவத்தை கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Next Story
×