search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கரூர் மாரியம்மன் கோவில் வரலாறும் அதன் சிறப்புகளும்
    X

    கரூர் மாரியம்மன் கோவில் வரலாறும் அதன் சிறப்புகளும்

    ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வம் கரூர் மாரியம்மன்.
    பழமையும் வரலாற்று சிறப்பும் வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.

    வரலாறு :

    இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவி லின் பரம்பரை அறங் காவலரின் கனவில் மாரியம் மன் சிறுமி வடிவில் தோன்றி எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப் படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.அப்பெரியவர் அதன் படியே தாந்தோன்றிமலை கிராமத் திற்கு சென்றார்.

    அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகல மாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.

    கம்பம் :

    தமிழகத்தின் தன்னிக ரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலகநாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங் கரித்து பூஜை ஆராதனை யுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.

    ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை ஸ்ரீசுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன் றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப் பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார் கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.



    சாமியை வணங்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :


    நினைத்த மாதிரி யெல்லாம் கோவிலுக்கு போகலாம் என்று நினைக் காதீர்கள். நிறைய ஐதீக விஷயங்கள் இருக்கின்றன. குளித்து, தூய ஆடை உடுத்தி கோவிலுக்கு செல்ல வேண் டும். தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைப் பொருள் அல்லது எண்ணெய், திரி அல்லது கற்பூரமாவது கொண்டு செல்ல வேண்டும். கோவி லுக்கு நடந்தே செல்ல வேண்டும். கோவிலில் முதலில் ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு பிறகே கோவிலுக்குள் செல்ல வேண்டும். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடி கம்பத்தை வணங்க வேண்டும்.

    அடுத்ததாக வாகனத்தை வணங்கி உள்ளே சென்று மூலவரை வணங்கி மான சீகமாக பாவிக்க வேண்டும். பிறகு துவார பாலகர்களை வணங்கி விட்டு கருவறைக்கு செல்ல வேண்டும்.

    அர்ச்சகர் பூஜை செய்யும் நேரத்தில் மூலவரை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். பின் னர் பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்க வேண்டும். பிரகாரத்தை முறையே 3, 5, 7, 9, 11, 27, 54, 108 ஆகிய எண்ணிக்கையில் சுற்றி வரலாம். வேகமாக நடக்காமல் அமைதியாக கடவுள் சிந்தனையோடு வலம் வர வேண்டும். விக்கிரகத்திற்கு தீபாரா தனை செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்க கூடாது.

    கோவிலில் ஆண்கள் ஆஷ்டாங்கமாகவும், பெண்கள் பஞ்சாங்கமாகவும் விழுந்து வணங்க வேண்டும். கருவறையில் திரைச்சீலை தொங்கும் போது வணங்குதல் கூடாது. கோவிலுக்குள் யாரையும் தீய வார்த்தைகளால் திட்டக்கூடாது. பிறரை துன்புறுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.கோவில் வழிபாட்டில் அமைதியும் மன ஒருங்கிணைப்பும் அவசியம். கோவிலுக்கு செல்லும் போது கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து செல்வது தான் நல்ல பலனைத் தரும்.

    எத்தனை காட்சிகள்! எல்லாமே அம்மாவின் மாட்சிகள் :

    ஆயிரம் ஆயிரம் திரு நாமங் களை கொண்ட அன்னை கருவூரில் மாரியாய் கொலு விருக்கும் காட்சியே அலாதி தான் ! பூப் பாவாடை கட்டி வாசனை மலர் சூடி வண்ண பட்டுடன் வாசனை சாம்பிராணி காட்டி விடின் கல்லான மனமெல் லாம் கரையும் அருட்காட்சி!

    அன்னையர்கள் மாவிளக்கு அழகொளிரும் மேல் திரிவிளக்கு, புன்னகைக்கும் தாய் கசப்பை இனிப்பாக்கி இருளை ஒளியாக்கி உயர்வு கூட்டும் மாட்சி திருக்காட்சி!

    எரியும் சுடரோடு ஏந்திய கரங்களில் ஒன்று இரண்டு ஏன்? மூன்று அக்னிச் சட்டிகள் கூட, சுடர் விடும் அக்னிச்சட்டிகளில் ஆங்கங்கே ஊற்றப்படும் எண்ணெய்! சுடரொளியில் அம்மாவின் கருணை முகம், கரங்களில் குளிர் நிலவின் தழுவல்! தாயன்பிற்கு நிகருண்டோ? கன்னல் கரும்பினைத் தொட்டியாக்கி இல்லை இன்னல் என பெற்றெடுத்த குழந்தைகளை பெற்றோர் சுமந்து வரும் வரக்காட்சி அம்மாவின் அருள் விளையாட்டின் திருக்காட்சி! பக்தர்களின் மனதில் நிறைந்து இருக்கும்.
    Next Story
    ×