search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நெல்லையில் நாளை இரண்டு லீக் ஆட்டங்கள்: திருப்பூர்-சேலம், நெல்லை-திண்டுக்கல் மோதல்
    X

    நெல்லையில் நாளை இரண்டு லீக் ஆட்டங்கள்: திருப்பூர்-சேலம், நெல்லை-திண்டுக்கல் மோதல்

    • சேலம் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
    • நெல்லை அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கலில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடந்தன. சேலத்தில் நடந்த லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் நாளை முதல் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அங்கு 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருப்பூர் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறுவது திருப்பூர் அணிக்கு அவசியமாகும். அந்த அணி பேட்டிங்கில் ராதாகிருஷ்ணன், கேப்டன் சாய் கிஷோர், விஜய் சங்கர், ரஹேஜா, அனிருத் ஆகியோரும், பந்து வீச்சில் புவனேஸ்வரன், அஜித்ராம், பெரியசாமி மணிகண்டன் ஆகியோரும் உள்ளனர்.

    சேலம் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது அவசியமாகும். பின்னர் மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக இருக்க வேண்டும். சேலம் அணியில் கேப்டன் அபிஷேக் தன்வார், சன்னி சந்து, கவுசிக் காந்தி, கணேஷ் மூர்த்தி, அமித் சாத்வீக், அபிஷேக், ஆகாஷ் சுமரா ஆகிய வீரர்கள் உள்ளனர். இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

    அருண்கார்த்திக் தலைமையிலான நெல்லை அணியில் அஜிதேஷ், நிரஞ்சன், சூரிய பிரகாஷ் ஈஸ்வரன், சோனு யாதவ், பொய்யாமொழி, மோகன் பிரசாத், லக்சய் ஜெயின் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    அஸ்வின் தலைமையிலாக திண்டுக்கல் அணியும் 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்-ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்வதிலும் அந்த அணியின் பாபா இந்திரஜித், ஷிரேம் சிங், ஆதித்ய கணேஷ், வருண் சக்கரவர்த்தி, சரவண குமார், சுபோத்பாட்டி, மதிவாணன் ஆகியோர் உள்ளனர்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×