விஷால் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
விஷால் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Published on

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால் 34 போஸ்டர்

இந்நிலையில், 'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் டைட்டிலுக்காக ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com