அடுத்த படத்திற்கு ரெடியான விஜய் சேதுபதி.. மலேசியாவில் தொடங்கிய பூஜை

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த படத்திற்கு ரெடியான விஜய் சேதுபதி.. மலேசியாவில் தொடங்கிய பூஜை
Published on

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை இன்று காலை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றுள்ளது. இதனை இயக்குனர் ஆறுமுக குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com