search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இது ஒரு பெருமையான தருணம்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
    X

    விக்னேஷ் சிவன்

    இது ஒரு பெருமையான தருணம்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நேற்று (09.08.2022) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பலருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், " இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் விக்னேஷ் சிவன், தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் குறுகிய காலத்தில் இந்த உலகளாவிய நிகழ்வுக்கு தங்கள் கடின உழைப்பு, ஆதரவு, ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முதல்வரின் பதிவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், "நிச்சயமாக இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு வெளிப்படும் ஒரு பெரிய விஷயங்களுக்கான ஒரு ஆரம்பம் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன், "இது ஒரு பெருமையான தருணம், பிரபஞ்சத்திற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×