கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த ஜெய் படக்குழு

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெய்
ஜெய்
Published on

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

தீராக்காதல் போஸ்டர்

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரண்யா என்ற கதாபாத்திரத்திலும் ஜெய், கவுதம் என்ற கதாபாத்திரத்திலும் ஷிவதா, வந்தனா என்ற கதாபாத்திரத்திலும் விருத்தி விஷால், ஆர்த்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தீராக்காதல் போஸ்டர்

இப்படம் மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com