புதிய போஸ்டர் வெளியிட்ட சூர்யா -42 படக்குழு

சூர்யா நடிக்கும் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் வருகிற 16-ஆம் தேதி காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா -42
சூர்யா -42
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா -42

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா -42 போஸ்டர்

இதையடுத்து இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com