பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.
பகத் பாசில்
பகத் பாசில்
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா 

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

புஷ்பா -2

இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஃபகத் பாசில் புஷ்பா முதல் பாகத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com