இணையத்தை கலக்கும் பிரசாந்த் நீல்-பிரபாஸ் கூட்டணியின் 'சலார்' பட டீசர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இணையத்தை கலக்கும் பிரசாந்த் நீல்-பிரபாஸ் கூட்டணியின் 'சலார்' பட டீசர்
Published on

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com