என் மலர்

  சினிமா செய்திகள்

  பொன்னியின் செல்வன் கடந்து வந்த பாதை
  X

  பொன்னியின் செல்வன் கடந்து வந்த பாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீண்ட போராட்டத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்-1.
  • இப்படத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

  உலகின் முதன்மை மொழியாகிய தமிழின் ஆகச்சிறந்த நாவலான "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி கிருஷ்ணமுர்த்தி அவர்கள் 1950 முதல் 1954 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் பதிவிட்டார். அதன்பின் 1955-ஆம் ஆண்டு அந்த நாவலை ஐந்து பாகங்களாக கொண்ட புத்தகமாக வெளியிட்டார். ஒரு நல்ல புத்தகம் வாசகனின் மனதை அதுவாகவே உள்ளீர்த்துக் கொள்ளும். அவ்வகையில் பொன்னியின் செல்வன் பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.

  இந்த பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுப்பதற்காக, 1958-ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கியிடம் 10,000 ரூபாய் கொடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு அக்கதையின் காப்புரிமையை வாங்கினார். அக்கால நடிகர் மற்றும் நடிகைகளாகிய வைஜெயந்தி மாலா, ஜெமினி கணேசன், பத்மினி, சரோஜா தேவி, சாவித்திரி, எம்.என். ராஜன், டி.எஸ். பாலையா, நம்பியார் ஆகியோரை வைத்து இப்படம் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், அவருக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தால் படம் எடுப்பதற்கான வேலை நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் நான்கு ஆண்டுகள் முயற்சித்தும் தோல்வியே தழுவியது.


  இதையடுத்து 1994-ல் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுப்பதாக முடிவு செய்து, பின் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இம்முயற்சியை அவர் கைவிடாமல் 2010-ல் மணிரத்னம் மற்றும் ஜெயமோகன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக முடிவு செய்யபட்டது.

  அதில் முக்கிய கதாபாத்திரமாகிய வல்லவராயன் வந்தியதேவன் என்னும் கதாபாத்திரத்தில் விஜய்யும் மற்றும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் பின் சில வேறு கதாபாத்திற்காக ஆர்யா, சத்யராஜ், விக்ரம், சூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது.


  இதன் படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் கோவில் மற்றும் மைசூர் அரண்மையையும் படப்பிடிப்பு தளத்திற்காக கேட்ட போது அனுமதியளிக்க மறுக்கப்பட்டது. இவ்வாறு பலரின் 70 ஆண்டுகால முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் ஜனவரி 2019-ல் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக மணிரத்னம் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. வல்லவராயன் வந்தியதேவனாக விஜய் சேதுபதியும் பின் சில கதாபாத்திற்காக சிம்பு, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக இருந்தாகவும் கூறப்பட்டது. பல்வேறு பட்ட காரணங்களால் விஜய் சேதுபதி, சிம்பு, அமிதாப் பச்சன், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலாமல் போனதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  அதன்பின்னர் 6 மாதங்ளுக்கு பிறகு ஜுன் 2019-ல் இயக்குனர் மணிரத்னம், அவரின் மூன்றாம் முயற்சியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் இணைந்து "பொன்னியின் செல்வன்-1" படத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் வல்லவராயன் வந்தியதேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக (இராசராச சோழர்) ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.


  சில மாதகளுக்கு முன் "பொன்னியின் செல்வன்-1" படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் (ஜுலை 8) இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களின் மத்தியில் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகயுள்ளது.


  பாகுபலி படத்தில் அனைவராலும் ஈர்க்கபட்ட "ராஜ மாதா சிவகாமி தேவி" கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள குந்தவை என்ற கதாபாத்திரத்தை துணையாக்கமாக கொண்டு உருவாக்கபட்டதாகவும், அதை போல் ரஜினி நடித்த படையப்பா படத்தில் "நீலாம்பரி" என்ற கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலில் மைய கதாபாத்திரமாகிய நந்தினியை துணையாக்கமாக கொண்டு உருவாக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.


  இவ்வாறு பல ஆண்டு காலத்திற்கு பின் பலரின் முயற்சி தோல்வியடைந்த நிலையிலும் விடாமுயற்சியால் தற்பொது வெற்றிகரமாக "பொன்னியின் செல்வன்-1" படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படம் பல வரலாற்று படங்களின் சாதனையை முறியடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்போம்.

  Next Story
  ×