அலாரத்தை செட் பண்ணி ரெடியா இருங்க.. எல்.ஜி.எம் படத்தின் புதிய அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM).இந்த திரைப்படத்தை டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து தயாரிக்கின்றனர்.
எல்.ஜி.எம்
எல்.ஜி.எம்
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எல்.ஜி.எம்

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

எல்.ஜி.எம் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை டோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com