என் மலர்

  சினிமா செய்திகள்

  நடிகை கங்கனாவின் அக்னிபாத் கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்
  X

  கங்கனா ரணாவத்

  நடிகை கங்கனாவின் "அக்னிபாத்" கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத்.
  • 'அக்னிபாத்' திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது என்று கங்கனா ரணாவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அதேநேரம் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது.


  கங்கனா ரணாவத்


  ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' என குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

  Next Story
  ×