என் மலர்

  சினிமா செய்திகள்

  ஜீவா, மிர்ச்சி சிவா படத்தின் போஸ்டர் வெளியீடு
  X

  சிவா - ஜீவா

  ஜீவா, மிர்ச்சி சிவா படத்தின் போஸ்டர் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கலகலப்பு-2 படத்தை தொடர்ந்து ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்து நடித்துள்ள படத்தின் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  'கலகலப்பு' திரைப்படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு-2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கத்ரீன் தெரசா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்துள்ள படம் 'கோல்மால்'. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  கோல்மால்

  'சாரு-லதா' திரைப்படத்தை இயக்கிய பொன் குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் 'லிங்கா' படத்தின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்குவார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். அருள் தேவ் இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

  Next Story
  ×