கவுதம் கார்த்திக் படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்ட படக்குழு

இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கவுதம் கார்த்திக்
கவுதம் கார்த்திக்
Published on

இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

இப்படம் உலக அளவில் ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com