மீண்டும் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா'

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான படம் 'ஃபர்ஹானா'.இப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.
மீண்டும் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா'
Published on

'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' திரைப்படம் வருகிற ஜூலை 7-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com