இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்.. எதற்கு தெரியுமா?

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.‘புஷ்பா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்.. எதற்கு தெரியுமா?
Published on

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com