இருள் உலகிற்கு வரவேற்கிறோம்.. டிமான்ட்டி காலனி 2 அப்டேட்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இருள் உலகிற்கு வரவேற்கிறோம்.. டிமான்ட்டி காலனி 2 அப்டேட்
Published on

'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாரர் டைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com