பிரைம் கஸ்டடியில் நாக சைதன்யா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கஸ்டடி'.இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நாக சைதன்யா
நாக சைதன்யா
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'கஸ்டடி'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

கஸ்டடி போஸ்டர்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கஸ்டடி' திரைப்படம் ஜூன் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com