என் மலர்

  சினிமா செய்திகள்

  லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், அனிருத்துக்கு..?
  X

  அனிருத்

  லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், அனிருத்துக்கு..?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூலில் சாதனைப்படைத்துள்ளது.
  • விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ், சூர்யா மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கமல் விலை உயர்ந்த பரிசினை வழங்கினார்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.

  அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார்.

  கமல் - லோகேஷ் கனகராஜ்


  இதையடுத்து 'விக்ரம்' படம் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நிருபர் ஒருவர் கமல் சார், லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு வாட்ச்சும் பரிசளித்தார் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், கமல் சார், விக்ரம் படத்தினை பரிசாக அளித்துள்ளார் என்று கூறியுள்ளார். அனிருத்தின் இந்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  Next Story
  ×