என் மலர்

  சினிமா செய்திகள்

  நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்
  X

  ஆலியா பட்

  நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
  • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


  ரன்வீர் சிங்

  அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். இவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


  ஆலியா பட் - ரன்வீர் சிங்

  இந்நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "டார்லிங்ஸ்" திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிரான எதையும் நான் கேட்க விரும்பவில்லை. என்னுடைய சக நடிகர் ரன்வீர் மீது வைக்கப்படும் புகார்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதளவில் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் திரைப்படங்களின் மூலம் நமக்காக நிறைய செய்துள்ளார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

  Next Story
  ×