ரஜினியுடன் ஒரு சந்திப்பு.. குஷ்பு நெகிழ்ச்சி..

நடிகை குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.இவர் தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி - குஷ்பு
ரஜினி - குஷ்பு
Published on

90-களில் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி - குஷ்பு

இந்நிலையில் குஷ்பு நடிகர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, "சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரண சந்திப்பு. அவருடன் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை

இவர் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

X

Maalai Malar
www.maalaimalar.com