நடிகை குஷ்புவுக்கு கிடைத்த கவுரவம்.. வாழ்த்தும் ரசிகர்கள்..

ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.இந்த விசா தற்போது குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குஷ்பு
குஷ்பு
Published on

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

பாவனா

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

குஷ்பு

சமீபத்தில் நடிகர் சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்புவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு "ஐக்கிய அமீரகத்திற்கு நன்றி. கோல்டன் விசாவை தாமதமாக பெற்றுக் கொண்டதற்கு மன்னித்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com