என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
தனுஷின் 'டி 51' டைட்டில் , கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு
- தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது
- இந்த படம் ஒரு கேங்க்ஸ்டரைப் பற்றியது படத்தின் கதை மும்பை மாபியாவை மையமாக அமைந்துள்ளது
நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு கடந்த ஆண்டு பூஜை போடப்பட்டது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை (கிளிம்ப்ஸ்) நாளை ( 8- ந்தேதி) மகா சிவராத்திரி, மகளிர் தினத்தில் வெளியிடப்படுகிறது.'இந்த படம் ஒரு கேங்க்ஸ்டரைப் பற்றியது என்றும், படத்தின் கதை மும்பை மாபியாவை மையமாக வைத்து அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் தனது 50-வது படமான 'ராயன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சுந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து உள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
தனுஷிடம் இன்னும் 2 திட்டங்கள் உள்ளன. ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மே' என்ற பாலிவுட்டில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் 3-வது முறையாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்குகிறார்.