என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
    • எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஜூனியர் என்டிஆர் கூறினார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், 24 கோடி மதிப்பு சொத்து விவகாரம் தொடர்பாக நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    ஜூப்லி ஹில்ஸ், ரோடு எண். 75ல் உள்ள 681 சதுர முற்றம் கொண்ட இந்த சொத்தை, ஜூபிலி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த சுங்கு கீதா லட்சுமி என்பவரிடமிருந்து ஜூனியர் என்டிஆர் 2003ல் ரூ.36 லட்சத்திற்கு வாங்கினார். இப்போது நடிகர் கட்டிய ஆடம்பரமான வீட்டை உள்ளடக்கிய இந்த நிலம் தற்போதைய சந்தை விலை சதுர அடிக்கு ரூ. 3.5 லட்சம் என்ற நிலையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சொத்து விவகாரத்தில் முந்தைய உரிமையாளரின் உறவினர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிகளில் கடன் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். வங்கிகள் டிஆர்டியை அணுகியதை அடுத்து, சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

    இந்நிலையில், இந்த சொத்து தொடர்பான நிலத் தகராறில் நிவாரணம் கோரி ஜூனியர் என்டிஆர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் கூறுகையில், "வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட உரிமை ஆவணங்கள் மற்றும் என்னிடம் உள்ள உரிமை ஆவணங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து வங்கியாளர்கள் மீதும் தற்போது குற்ற வழக்குகள் உள்ளன" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
    • இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் யோகி பாபு நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
    • இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

    மலையாள திரைப்படமான ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

    இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. தற்போது ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பகத் பாசில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படத்தின் கதையை சாந்தி மாயதேவி எழுதியுள்ளார். இவர் இதற்கு முன் திரிஷ்யம் 2 படத்திலும் விஜய் நடிப்ப்ல் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பகத் பாசில் ஜீது ஜோசப்புடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே. திரிஷியம் பட இயக்குனர் பகத் பாசலை வைத்து எம்மாதிரி கதைக்களத்துடன் படத்தை இயக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது.
    • படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப் பதக்க ம்வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

     

    கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒன்றை வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.

    அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் கார்த்திக் ஆர்யனின் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கமிட்மென்டை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை.
    • பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார்.

    1997-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் ராக்கி சவந்த். சுடாலி நம்பர் 1, குருக்ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார்.

    பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் 14-வது சீசனிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார்.

    சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். 45 வயதாகும் இவர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி பாலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்.

    மிகவும் மோசமான உடைகளை அணிவது, பலருடன் நெருக்கம் என அவர் போடாத ஆட்டமே கிடையாது. முதல் கணவரான ரித்தேஷ் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கானுடனும் ராக்கி சாவந்த் பிரச்சனை செய்து சண்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராக்கி சவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராக்கி சவந்தை அவரது முன்னாள் கணவர் தான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்.

     இதனைத்தொடர்ந்து அவருக்கு கருப்பையில் டியூமர் இருப்பதாகவும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுதொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இங்க நான் தான் கிங்கு படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

    வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (மே 17) வெளியாகிறது.

    இந்த படத்தில் சந்தானத்துடன் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "இங்க நான் தான் கிங்கு" படத்தை கோபிரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில், இந்த படத்தின் "மாயோனே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.

    இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

    இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

    இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

     

     

    என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
    • தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஜிவி பிரகாஷ்  இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
    • படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 25-வது படமாகும். காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பள்ளிக் கூடத்தில் அன்பான பி.டி வாத்தியாராக நடித்துள்ளார் ஆதி. அதன்பிறகு அந்த பள்ளிக் கூடத்தில் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப் படுகிறாள். அதை ஆதி தட்டி கேட்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார்.
    • நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.

    உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரதியேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இது நிலவி வருகிறது.

    நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். இது இதிகாச கதைகளும், புராண கதைகளும் , இந்திய வரலாரும் இதில் ஒளிப்பரப்ப போவதாக கூறியுள்ளார். இந்த ஓடிடி தளத்தில் வெறும் U ரேடட் கண்டண்டுகளை மட்டுமே ஒளிப்பரப்ப போவதாகவும் இது உல்லு தளத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை என கூறியுள்ளார்.

    ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாகும், மேலும் இது போன்ற கருப்பொருள்கள் மீது இளைய பார்வையாளர்களிடையே உலகளாவிய ஆர்வத்தை அதிகரிக்கும், இது இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் கதைகளை ஆராயும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஹரி ஓம் தளம் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 20 புராண நிகழ்ச்சியை வைத்து தொடங்க போகிறார்கள். குழந்தைகளுக்கு அனிமேஷன் வடிவில் புராண நிகழ்ச்சிகள் இடம் பெறும் என தெரிவித்துள்ளனர்.

    உல்லு போன்ற அடல்ட் வீடியோக்களை தயாரிக்கும் அதே நிறுவனம் இப்படி ஒரு ஆன்மீக தளத்தை தொடங்குவது மகக்ளிடையே அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் உல்லு நிறுவனத்தை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் புழு என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளதாக எழுந்த குற்றசாட்டில் சமூக வலைத்தளங்களில் மம்முட்டி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    புழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரதீனா. அண்மையில் இவரது கணவர் ஷர்ஷத் பனியாண்டி ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது புழு திரைப்படம் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளது. மம்முட்டி ஏன் அந்த திரைப்படத்தில் நடித்தார். அவர் படத்தின் ஸ்க்ரிப்டை படித்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஹர்ஷத் ஒரு தீவிரமான இஸ்லாமியர் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் பலரும் ஈடுபட்டனர்.

    நடிகர் மம்முட்டி மீதான இத்தகைய வெறுப்பு பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், மம்முட்டியை மதம் அல்லது சாதியின் பிரிவுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது. வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார். கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதே போல் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டி மலையாளிகளின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

    "மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கும் சங்பரிவார் அரசியல் கேரளாவில் இயங்காது" என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ஃபஜன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×