#VJS51 படத்தின் புதிய அப்டேட் கொடுத்த படக்குழு

கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#VJS51 படத்தின் புதிய அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபு நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com