இங்க நான் தான் கிங்கு - மாயோனே பாடல் வீடியோ வெளியீடு

இங்க நான் தான் கிங்கு படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
இங்க நான் தான்  கிங்கு - மாயோனே பாடல் வீடியோ வெளியீடு
Published on

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (மே 17) வெளியாகிறது.

இந்த படத்தில் சந்தானத்துடன் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "இங்க நான் தான் கிங்கு" படத்தை கோபிரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில், இந்த படத்தின் "மாயோனே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com