என் மலர்

  சினிமா செய்திகள்

  விஷால் - ரித்து வர்மா
  X
  விஷால் - ரித்து வர்மா

  விஷாலுடன் கைக்கோர்த்த ரித்து வர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்க் ஆண்டனியாக களமிறங்கி இருக்கும் விஷாலுடன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதாநாயகி ரித்து வர்மா இணைந்துள்ளார்.
  நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இதனை தொடர்ந்து விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

  ரித்து வர்மா
  ரித்து வர்மா

  இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி என்ற பெயர் 1995-ல் ரஜினி நடிப்பில் வெளியான பாட்சா திரைப்படத்தின் வில்லன் ரகுவரனின் கதாப்பாத்திர பெயராகும். எனவே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

  ரித்து வர்மா
  ரித்து வர்மா

  இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதாநாயகி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி துலகர் சல்மான் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்து வர்மா இதில் விஷாலுக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
  Next Story
  ×