search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பேரரசு
    X
    பேரரசு

    அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது - இயக்குனர் பேரரசு

    'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட இயக்குனர் பேரரசு தமிழ் குறித்து பேசியுள்ளார்.
    'கார்கில்' படத்தை இயக்கிய ஷிவானி செந்தில் இயக்கும் அடுத்த படம் டேக் டைவர்சன். டேக் டைவர்சன் திரைப்படம் 70’ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ் மற்றும் 2கே-கிட்ஸ்களின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய படமாக டேக் டைவர்சன் உருவாகியுள்ளது. ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கேஜிஎஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.

    'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, “இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய் தான். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்' என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகனிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் தான் தாய். இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றிகள் தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். இப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குரு தான் அனைத்தும். அதன்பிறகுதான் தாய் உள்ளிட்ட பலர்.

    பேரரசு
    பேரரசு

    அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும். இந்தி எதிர்ப்பு.. இந்தி திணிப்பு ...என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ்ப் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

    சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்.. சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான. பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.
     தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்து விட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குனர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்” என்றார்.

    Next Story
    ×