search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பீஸ்ட் - விஜய்
    X
    பீஸ்ட் - விஜய்

    நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா.. வைரலாகும் புகைப்படம்

    நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலருக்கு காத்திருக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் படக்குழுவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. 

    பீஸ்ட்
    பீஸ்ட்

    'பீஸ்ட்' படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவின் மூலம் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ”நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலர்க்கு வெயிட்டிங் நண்பா” என்று பதிவிட்டு விஜய் மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×